பட்ஜெட் தாக்கல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன.

Last Updated : Feb 1, 2020, 04:29 PM IST
பட்ஜெட் தாக்கல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!  title=

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன.

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். காலையில் வர்த்தகம் துவங்கும் போது சிறிய அளவிலான சரிவு இருந்த நிலையில் 3 மணியளவில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1060 புள்ளிகள் சரிந்து 39,663.70 ஆகவும்,  நிப்டி 316 புள்ளிகள் சரி்ந்து 11,646 ஆகவும் சரிந்து காணப்பட்டன.  வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 39,735.53 ஆகவும், நிப்டி 300 புள்ளிகள் சரிந்து 11,661 ஆகவும் முடிந்தது.

 

 

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவியதாக வல்லுநா்கள் தெரிவித்தனா். சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், மத்திய பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் போன்றவையும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

சர்வதேச பங்குச் சந்தைகளில் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா பங்குச் சந்தைகள் இழப்பைச் சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியுடன் தொடங்கின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசாக்கள் குறைந்து ரூ.71.51 ஆக இருந்தது. 

இந்நிலையில் தற்போது இன்று காலை நிலவரபடி பங்கு சந்தை வர்த்தகம் சரிந்து தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை சரிவு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Trending News