சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் அருகே ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப்படை மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்!

Last Updated : Aug 3, 2019, 12:42 PM IST
சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் அருகே ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. title=

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப்படை மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள சித்கோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்த பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

சத்தீஸ்கர் காவல் பணிப்பாளர் நாயகம் செய்தி நிறுவனம் ANI-யிடம் கூறுகையில்; பேக்னடி காவல் நிலையத்தின் கீழ் இந்த என்கவுன்டர் நடந்தது என்று கூறினார். இப்பகுதியில் பலத்த மழை பெய்தபோதும் கடைசி அறிக்கைகள் வரும் வரை இந்த சந்திப்பு தொடர்ந்தது.

இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,  அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்கவுன்டர் தொடங்கியபோது இப்பகுதியில் 40 முதல் 50 நக்சல்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. நக்சல்களின் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும்.

மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

 

Trending News