மும்பை: மகாராஷ்டிரா (Maharashtra) அரசியலில் சரத் பவார் (Sharad Pawar) 'சூப்பர் பாஸ்' ஆக மாற உள்ளார் என்று மகாராஷ்டிராவின் அரசியல் தொடர்பான ஒரு பெரிய செய்தி வெளி வந்துள்ளது. தகவல் அளித்த வட்டாரங்களின்படி, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் மூன்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றாக இருப்பார்கள். இந்த குழு அரசாங்கத்திற்கு மற்றும் முதல்வருக்கும் ஆலோசனை வழங்கும். தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party) தலைவர் சரத் பவார், இந்த குழுவின் தலைவராக இருப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது. யுபிஏ (United Progressive Alliance) சூத்திரத்தின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்பு இன்று நடைபெற உள்ளது. சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) முதல்வர் பதவியேற்க உள்ளார். மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். நவம்பர் 30-க்குள் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிப்பர் எனத் தெரிகிறது. இருப்பினும், தாக்கரே பதவியேற்பதற்கு முன்பு, அதிகாரத்தின் மேலாதிக்கத்தின் கோபம் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் தோன்றத் தொடங்கியுள்ளது. அதாவது அஜித் பவார் முதலமைச்சராக்கப்பட்ட சுவரொட்டிகள் பாரமதியில் வைக்கப்பட்டு உள்ளன.
மறுபுறம், ஆதாரங்களின்படி, அஜித் பவாரை மீண்டும் சட்டமன்றக் கட்சியின் தலைவராக்க முடியும். என்.சி.பி சட்டமன்றக் கூட்டம் இன்று மாலை நடைபெற வாய்ப்புள்ளது. மாமா ஷரத் பவார் மற்றும் மருமகன் அஜித் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பிறகு, அஜித் பவாரின் முந்தைய நிலையை மீட்டெடுக்க என்சிபி விரும்புகிறது. இருப்பினும், அஜித் பவார் துணை முதல்வராக இருப்பாரா அல்லது அவருக்கு அமைச்சகம் வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அஜித் பவார் தன் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததும், அவருக்கு பதிலாக ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டதும் அவர் என்சிபி சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆதாரங்களின்படி, ஆதித்யா தாக்கரே அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என்று பார்த்தோமானால் 16-15-12 என்ற சூத்திரத்தைத் தயாரித்துள்ளார். அமைச்சரவையில் சிவசேனாவின் 16, என்.சி.பி.யின் 15 மற்றும் காங்கிரசின் 12 பேர் இருக்கலாம். இருப்பினும், சபாநாயகர் மற்றும் துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கோருகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எட்ட முடியவில்லை.
ஆனால் நேற்று வெளியான தகவலின் படி, அமைச்சரவை ஒதுக்கீட்டில் சிவசேனாவுக்கு 15 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் உட்பட மொத்தம் 14 அமைச்சர்களை என்சிபி பெற வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு 13 அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரசுக்கு துணை முதல்வர் தலைவர் அல்லது சட்டமன்ற சபாநாயகர் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
சிவசேனா 10 அமைச்சர்களின் விவரம்:
ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், ராம்தாஸ் கதம், திவாகர் ராவடே, அனில் பராப், சுனில் சாவந்த், அப்துல் சத்தார், பிரதாப் சர்நாயக், சுனில் பிரபு, ரவீந்திர வைகர் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ்: 10 அமைச்சர்களின் விவரம்:
என்.சி.பி. கட்யிலிருந்து அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 10 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளன. ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், நவாப் மாலிக், ராஜேஷ் டோப், அனில் தேஷ்முக், ஜிதேந்திர அவாத், ஹசன் முஷ்ரிப் ஆகியோர் அமைச்சர்களாக ஆகலாம்.
காங்கிரஸ் கட்சியின் 8 அமைச்சர்களின் விவரம்:
அமைச்சர் பதவிக்கு 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. பாலாசாகேப் தோரத், அசோக் சவான், மணிக்ராவ் தக்ரே, யஷோமதி தாக்கூர், அமித் தேஷ்முக், விஜய் வட்டிதிவார், வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் அமைச்சர்களாக மாறுவது கிட்டத்தட்ட உறுதி.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.