மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி அணியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார். இதனைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர்உத்தரவிட்டார். அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சிறப்பு கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மகாராஷ்டிர சட்டசபையில் தற்போது 287 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 164 வாக்குகள் கிடைத்தன. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு எளிமையாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்!
நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, மும்பையில் நேற்றிரவு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை மேற்கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், "மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களில் விழக்கூடும், எனவே இடைத்தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" என கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் கிளர்ச்சி சிவசேனா எம்எல்ஏக்கள் தற்போதைய ஏற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும், அமைச்சர்களுக்கு துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்பு இந்த அதிருப்தி வெளியில் தெரியவரும் எனவும் சரத் பவார் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அதிருப்தி மகாராஷ்டிர அரசு கவிழவே வழிவகை செய்யும் எனவும், ஆறு மாதங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் அதிக நேரம் செலவிட வேண்டும் எனவும் சரத் பவார் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | ஆட்டோ ஓட்டுநர் To மகாராஷ்டிரா முதலமைச்சர் - யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR