Bank Deposit Tax Rules | ஒரு வணிக ஆண்டில் உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்று நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?. வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த அடிப்படை தகவலை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வருமான வரி கட்ட நேரிடலாம். அதனால், வருமான வரிச்சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வணிக ஆண்டில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதாவது குறிப்பிட்ட ஆண்டில் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை சேமிக்கக்கூடாது. இல்லையென்றால் அதிகமான டெபாசிட்களுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். 10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். இந்த வரம்பு ஒரு சேமிப்புக் கணக்கிற்கு மட்டுமல்ல, உங்கள் எல்லா சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தும்.
10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் என்ன நடக்கும்?
10 லட்சத்துக்கும் மேலான டெபாசிட்கள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளாகக் கருதப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறைக்கு இதுபோன்ற டெபாசிட் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. ஒரு நாளில் ரூ.50,000 டெபாசிட் செய்தால் கூட பான் எண் வழங்குவதும் கட்டாயமாகும். யாருக்காவது பான் எண் இல்லை என்றால், அவர்கள் படிவம் 60/61 வங்கிகளில் பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்! எவ்வளவு பணம் வேணாலும் போடுங்க
வைப்புத்தொகையில் பெறப்பட்ட வட்டிக்கு என்ன நடக்கும்?
ஒரு வணிக ஆண்டில் வங்கி வைப்புத் தொகைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி சம்பாதித்தால், நிலையான ஸ்லாப்பின் அடிப்படையில் அதற்கு வரி விதிக்கப்படும். ஒரு வணிக ஆண்டில் வங்கி வைப்புத் தொகையிலிருந்து பெறப்பட்ட வட்டி ரூ. 10,000 க்கும் குறைவாக இருந்தால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTA இன் கீழ் வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் 80TTB பிரிவின் கீழ் 50,000 ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு பெறலாம். இந்த வரம்பை கணக்கிட, உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளிலும் டெபாசிட்களுக்கு ஈட்டப்படும் வட்டியைச் சேர்க்க வேண்டும்.
வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்வது?
அதிக மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்தால், முதலில் அதற்கான போதிய ஆதாரத்தை அளிக்க வேண்டும். வங்கி அறிக்கைகள், முதலீட்டு பதிவுகள் மற்றும் பரம்பரை ஆவணங்கள் தேவைப்படலாம். இதற்கு அங்கீகாரம் பெற்ற ஆடிட்டரை அணுகுவது நல்லது. ரொக்கப் பரிவர்த்தனைகளைப் பொறுத்த வரையில், 269ST பிரிவின் கீழ், எந்த ஒரு நபரும் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல் யாரிடமும் பரிவர்த்தனை செய்ய முடியாது.
மேலும் படிக்க | ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள்: இனி எதன் விலைகள் உயரும்? எதன் விலைகள் குறையும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ