ஷீரடி பாபா கோவிலை ஏப்ரல் 30 வரை மூட கோவில் நிர்வாகம் முடிவு

ஷீரடியின் சாய் பாபா கோயிலின் ஒரு நாளைக்கு 4 முறை நடைபெறவுள்ள ஆரத்தி, பூஜை, பஜனை பாடல்கள் உட்பட அனைத்தும் கோயிலை சேர்ந்த பண்டிதர்கள் மூலம் நடத்தப்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 5, 2021, 09:13 PM IST
  • ஷீரடியின் சாய் பாபா கோயில் பக்தர்களுக்காக மூடப்பட்டது
  • கோயிலின் அர்ச்சகர் ஆர்த்தி மற்றும் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வார்.
  • கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஷீரடி பாபா கோவிலை ஏப்ரல் 30 வரை மூட கோவில் நிர்வாகம் முடிவு  title=

மும்பை: மகாராஷ்டிரா,  ஷீரடியில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயில்  ஏப்ரல் 30 வரை மூடப்படும். இந்த நேரத்தில், கோயிலின் மற்ற அனைத்து பூஜைகளும் ஆரத்தியும் முன்பு போலவே தொடரும்.

அண்மையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இங்கு ஒரு நாளைக்கு 4 முறை நடைபெறவுள்ள ஆரத்தி, பூஜை, பஜனை பாடல்கள் உட்பட அனைத்தும் கோயிலை சேர்ந்த பண்டிதர்கள் மூலம் நடத்தப்படும். அதே நேரத்தில், பக்தர்களின் தரிசனத்திற்காக மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஷிரடி சாய் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக அதிகாரி ரவீந்திர தாக்கரே, கோவிட் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட கோவிட் அல்லாத பிற மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை முன்புபோலவே தொடரும் என்று கூறினார்.

மகாராஷ்டிரா அரசு கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவித்த பின்னர், ஷீரடி சாய் பாபா கோயில் நிர்வாகம்  இந்த முடிவு எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா முழுவதும் மகாராஷ்டிரா அரசு இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படும், அதே போல் மாலையில் 5 பேர் ஒன்றாக  கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வார இறுதிகளில் லாக்டவுனை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிவை எதிர்த்து வணிக வர்க்கம் போராட்டம் நடத்தியது.

ALSO READ |  Watch: காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக  உயரமான ரயில்வே பாலம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News