மோடிக்கு ஆதரவு இல்லை; நிதின் கட்காரிக்கு தான் ஆதரவு: சிவசேனா திட்டவட்டம்

2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 23, 2019, 08:27 PM IST
மோடிக்கு ஆதரவு இல்லை; நிதின் கட்காரிக்கு தான் ஆதரவு: சிவசேனா திட்டவட்டம்
Photo: PTI

2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

தற்போது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா வசித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிஜேபியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த வருடத்துடன் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவடைகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தான் உள்ளது. 

ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி சென்றுள்ளது. மேலும் கடைசியாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டது. மேலும் அதன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து வருகிறது. 

தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துள்ளது. சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டு உள்ளது. 

இந்தநிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவுத் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவின் நிலை என்ன என்பதைக் குறித்து பேசினார். 

அவர் கூறியாதவது, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் போல இல்லாமல், இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. அவர்களுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கு இடமே இல்லை. வரும் மக்களவை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு மக்களவை தான் ஏற்படும். அப்பொழுது பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை முன்னிறுத்த வேண்டும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம். அதேபோல காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணி வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.