புது தில்லி: சொமேட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) போன்ற ஆன்லைன் செயலி அடிப்படையிலான உணவு விநியோக தளங்கள் இப்போது 5 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும். அதாவது ஜிஎஸ்டி கவுன்சிலின் 45வது கூட்டத்தில் (GST Council meeting), உணவு விநியோக நிறுவனங்களை வரி வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), இந்த உணவு விநியோக தளங்கள் அவர்கள் வழங்கும் உணவக சேவைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று கூறினார்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படாது:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் (Finance Minister Nirmala Sitharaman) அறிவிப்பை அடுத்து, இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய ஜிஎஸ்டி விதியின் கீழ் டெலிவரிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என வாடிக்கையாளர்கள் தங்கள் அச்சதத்தை தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், புதிய வரி எதுவும் விதிக்கப்படாததால், நுகர்வோர் மீது இந்த நடவடிக்கை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டது. இருப்பினும் பல பொருட்களின் வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படாது, புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்பு உணவகம் செலுத்த வேண்டிய வரி, இப்போது உணவகத்திற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் மூலம் வரி செலுத்தப்படும்.
ALSO READ | பெட்ரோல் டீசல் GST-யின் கீழ் கொண்டு வரப்படுமா.. வெளியானது முக்கிய தகவல்!
கூடுதல் வரி விதிக்கும் கேள்விக்கு இடமில்லை:
நீங்கள் செயலி மூலம் உணவை ஆர்டர் செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போதே அந்த நிறுவனம் உங்களிடமிருந்து பணத்தை வசூலித்துக் கொண்டு, அதன் பின்னர் உங்களின் உணவு ஆர்டருக்கு நிறுவனம் வரி செலுத்துகிறது. ஆனால் பல உணவகங்கள் ஆணையத்திற்கு வரி செலுத்தாமல் இருப்பதைக் கண்டறிந்தோம். அத்தகைய சூழ்நிலையில், இப்போது உணவு சேகரிப்பாளர் நுகர்வோரிடமிருந்து வரியைப் பெற்று, நீங்கள் உணவை ஆர்டர் செய்த உணவகத்திற்கு வரியை கொடுக்காமல், நேரடியாக அதிகாரியிடம் கொடுப்பார். இதனால் அரசுக்கு நேரடியாக வரி கிடைக்கும். ஏற்கனவே இருந்த வரியை தான், தற்போது அரசு நேரடியாக வாங்குகிறது. எனவே புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், உணவு விநியோக செயலிகளான Swaggy மற்றும் Zomato ஆகியவற்றிலிருந்து உணவை ஆர்டர் செய்வதற்கு கூடுதல் வரி விதிக்கும் கேள்விக்கு இடமில்லை என்று நிதியமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.
ஜிஎஸ்டி வரி உயர்வு:
கார்பனேற்றப்பட்ட பழ பானங்கள் உணவுப் பொருட்களில் விலை உயர்ந்தன. இது 28% ஜிஎஸ்டி மற்றும் அதற்கு மேல் 12% நஷ்ட ஈடு செஸ் (Compensation Cess) வரி விதிக்கப்படும். இதற்கு முன்பு 28% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டது.
இது தவிர, இனி ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கும் அதிக பணம் செலவழிக்க வேண்டும். இதற்கு 18% வரி விதிக்கப்படும். இனிப்பான வெற்றிலை மற்றும் ஏலக்காய் விலை உயர்ந்ததாக இருக்கும். முதலில் 5% ஜிஎஸ்டி ஆக இருந்தது. அது ஜனவரி முதல் 18% ஆகிவிடும்.
இதேபோல் 1000 ரூபாய்க்கு குறைவான காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
ALSO READ | சாதனை படைக்கும் GSTவசூல்; அக்டோபர் மாதம் ₹ 1,30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR