புதுடெல்லி: சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். சிறையில் வழங்கப்படும் உணவையே உண்ண வேண்டும் என முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட ஜாமீன் மனு இன்று டெல்லி உயர்நீத்திமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி ப. சிதம்பரத்தை நீதிமன்றம் காவலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் ஏன் நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள்எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், வாரத்தின் கடைசி நாள் மற்றும் நீண்ட விடுமுறையின் காரணமாக நேற்று மணிவை தாக்கல் செய்தார் என பதில் அளித்தார். அதைகேட்ட நீதிபதி ஜாமீன் தொடர்பாக கீழ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனக்கூறியது. இதனையடுத்து ஜாமீன் மனுவை ப. சிதம்பரம் திரும்ப பெற்றார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் நீதிமன்றத்தில், வீட்டில் சமைத்த உணவை தனக்கு வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதுதான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும். சட்டம் அனைவரும் சமம் எனத் திட்டவட்டமாக கூறியது.