தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க வகை செய்யும் அமெரிக்க அரசின் கொள்கை மாற்றத்திற்கு, அமெரிக்க அதிபர் ஜோ படைன், மற்றும் அதனை சாத்தியமாக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா (Adar Poonawalla) நன்றி கூறுகிறார்
அமெரிக்க நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவிற்கான மூலப்பொருட்களின் விநியோகம் அதிகரிக்கும் என்று அதார் பூனவல்லா கூறினார்.
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca), நோவாவாக்ஸ் (Novavax ) மற்றும் சனோஃபி (Sanofi) ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியதை அடுத்து, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா அமெரிக்க அரசாங்கத்திற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் நன்றி தெரிவித்தார். இதனால், எங்களது தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்பதோடு, இந்த தொற்றுநோய்க்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்தும்" என்று பூனவல்லா ட்வீட் செய்துள்ளார்.
Thanks to the efforts of @POTUS, @WhiteHouse, & @DrSJaishankar, this policy change will hopefully increase the supply of raw materials globally and to India; boosting our vaccine production capacity and strengthening our united fight against this pandemic. https://t.co/bHADBwiUnm
— Adar Poonawalla (@adarpoonawalla) June 4, 2021
இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தடுப்பூசி விநியோகச் சங்கிலியை உறுதிபடுத்தி பாதுகாப்பதில் இந்தியா ராஜீய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என பதில் ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ | Sputnik V தடுப்பூசியை தயாரிக்க அனுமதி கோரும் சீரம் நிறுவனம்
அமெரிக்க நிர்வாகம் அதன் தடுப்பூசி பகிர்வு திட்டத்தையும், அஸ்ட்ராஜெனெகா, நோவாவாக்ஸ் மற்றும் சனோஃபி தடுப்பூசிகளின் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தின் முன்னுரிமை மதிப்பீடுகளை அகற்றுவதற்கான முடிவையும் வெளியிட்டது. இந்த தளர்வு மூலம், நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை யாருக்கு விற்க விரும்புகின்றன என்பதை இப்போது தீர்மானிக்க முடியும்.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை (ஜூன் 3) தொலைபேசியில் பேசினார். இந்த தொலைபேசி அழைப்பிற்கு அமெரிக்க தரப்பினரின் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த தொலைபேசி உரையாடலின் போது, ஜூன் மாதத்திற்குள் அமெரிக்கா, இந்தியா உடனும் மற்ற நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என்று ஹாரிஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் பிரிட்டனில் ₹2400 கோடி முதலீடு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR