உயிருக்கு அச்சுறுத்தல், Z+ பாதுகாப்பு தேவை: அதார் பூனாவாலா பாம்பே HC-ல் மனு தாக்கல்

மாநில முதலமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த நபர்களிடமிருந்து தடுப்பூசி வழங்கல் குறித்து தொடர்ச்சியாக பூனாவாலாவுக்கு அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பூனாவாலா இங்கிலாந்துக்கு சென்றதாக மானே ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 09:54 AM IST
  • சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலாவின் உயிருக்கு அச்சுறுத்தல்.
  • அதார் பூனாவாலாவுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்-வழக்கறிஞர்.
  • SII-ன் சொத்துக்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்-வாழக்கறிஞர்.
உயிருக்கு அச்சுறுத்தல், Z+ பாதுகாப்பு தேவை: அதார் பூனாவாலா பாம்பே HC-ல் மனு தாக்கல் title=

புதுடெல்லி: இந்தியாவில் பலகோடி மக்களின் உயிர் காக்கும் தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவரது உயிருக்கு அச்சுறுத்தல்!! ஆம், நம்ப முடியாவிட்டாலும் இது உண்மைதான். கொடிய தொற்று நம்மிடையே பரவிக்கொண்டிருக்கும் இந்த சூழலிலும், நம்மில் சிலர், நாங்களும் வைரசுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது காட்டிக்கொண்டிருக்கிறார்கள்

கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலாவின் (Adar Poonawalla) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவருக்கு இசட் + பாதுகாப்பு (Z+ security) கோரி வழக்கறிஞர்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பூனாவாலாவை சிலர் அச்சுறுத்தியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த அதே வழக்கறிஞர் தத்தா மானே தான் இந்த மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

"அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, அதார் பூனாவாலா இந்தியாவை விட்டு வெளியே சென்றுவிட்டால், பின்னர் நமது நிலைமை கேப்டன் இல்லாமல் புயலில் தத்தளிக்கும் கப்பலைப் போல் ஆகிவிடும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பூனாவாலாவின் உயிர் மற்றும் SII-ன் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வெண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SII உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இது கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்டை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் சிலரிடமிருந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், கோவிட் -19 (COVID-19) தடுப்பூசிகளின் தேவை தொடர்பாக முன்னோடியில்லாத வகையில் அழுத்தம் மற்றும் இறுக்கம் அளிக்கப்படுவதால் அவரும் அவரது குடும்பமும் லண்டனுக்கு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். 

ALSO READ: மத்திய அரசிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது: SII அதார் பூனவல்லா

ஊடக அறிக்கையின்படி , மாநில முதலமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த நபர்களிடமிருந்து தடுப்பூசி வழங்கல் குறித்து தொடர்ச்சியாக பூனாவாலாவுக்கு அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பூனாவாலா இங்கிலாந்துக்கு சென்றதாக மானே ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

பார் & பெஞ்ச் அறிக்கையின்படி, பூனாவாலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், SII-ன் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் புனே காவல்துறை ஆணையர் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு அளிக்கப்பட்டுள்ள மனுவில் மானே கோரியுள்ளார். தான் பதிவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

முன்னதாக புனே காவல்துறை ஆணையர்  மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் டைரக்டர் ஜெனரலிடம் புகார் அளிக்கப்பட்டதாக மானே கூறினார். தனக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் புகாரை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா அரசு பூனாவாலாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிஷீல்ட் (Covishield) போன்ற ஒரு உயிர்காக்கும் தடுப்பூசியைத் தயாரிப்பவர் என்ற முறையில் பூனாவாலாவுக்கு இப்படிப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மானே வாதிட்டார்.

"இந்தியாவில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறினால், தொற்றின் பரவும் விகிதம் அதிகமாகும், ஆயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படும். இது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை உண்டாக்கக்கூடும், அவை சுகாதார உள்கட்டமைப்பை எளிதில் மூழ்கடிக்கும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News