வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை வாசித்த நிதி அமைச்சர்

வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாசித்தார். 

Updated: Feb 1, 2020, 05:15 PM IST
வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை வாசித்த நிதி அமைச்சர்

வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாசித்தார். 

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை 2.45 மணியளவில் முடிவுற்றது.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.

இதன் மூலமாக இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்ட உரையை வழங்கியுள்ளார். முன்னதாக, 2019-20ஆம் ஆண்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார். 
2014ஆம் ஆண்டில் அமைச்சர் அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்களும், 2003ஆம் ஆண்டில் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 2 மணி நேரம் 13 நிமிடங்களும் பட்ஜெட் உரையாற்றியுள்ளனர்.

தனது உரையில், கிராமப்புற, உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் துறைகள் தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டார். பட்ஜெட்டுக்குப் பிறகு பல பொருட்கள் மலிவாக மாறும், அவற்றில் சிலவும் விலை உயர்ந்ததாக மாறும்.