வெங்கய்யா நாயுடு இலக்காகளை ஸ்மிருதி இரானி, தோமரிடம் ஒப்படைக்கப்பட்டது

Last Updated : Jul 18, 2017, 01:23 PM IST
வெங்கய்யா நாயுடு இலக்காகளை ஸ்மிருதி இரானி, தோமரிடம் ஒப்படைக்கப்பட்டது title=

தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி துணை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 

பாஜக சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து தனது மத்திய அமைச்சர் பதவியை வெங்கைய்யா நாயுடு ராஜினாமா செய்தார். அவர் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். 

இந்நிலையில், வெங்கையா நாயுடு வசம் இருந்த மத்திய தகவல் ஒலிபரப்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையை மற்ற மத்திய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, மத்திய ஜவுளித்துறை மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இரானியிடம் ஒலிபரப்பு துறையையும்,

 

 

மத்திய சுரங்கத்துறை, உருக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரான நரேந்திர சிங் தோமரிடமும் மத்திய தகவல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்படைக்கப்பட்டது.

 

 

எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News