பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியின் மகன், தனது 12 வகுப்பு தேர்வில் 88% மதிப்பெண் பெற்றுள்ளார்!
பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவின் மகன் கலிப் குரு, ஜம்மு மற்றும் காஷ்மீர் கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி தேர்வில் முதன்மை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
2001-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அப்சல் குரு அவரது குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.
இவரது மகன் கலிப் குரு, இன்று வெளியான தேர்வு முடிவில் 88% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
Afzal Guru's son Ghalib Afzal Guru clears class XII J&K state board exams with distinction. pic.twitter.com/XH0LSK2vni
— ANI (@ANI) January 11, 2018
இதனையடுத்து பாரமல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு, நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.