கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை: முலாயம் சிங்

Last Updated : Jan 11, 2017, 06:24 PM IST
கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை: முலாயம் சிங் title=

கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். 

கட்சி தலைமையகத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:-

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். கட்சியில் ஒற்றுமை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புதிதாக எந்தக் கட்சியையும் தொடங்கவும் மாட்டேன், சின்னத்தையும் மாற்ற மாட்டேன். 

அகில பாரதிய சமாஜ்வாதி கட்சியை யார் உருவாக்கினார்கள் என்பதையும் நான் அறிவேன். மோட்டர் சைக்கிள் தேர்தல் சின்னத்தை விரும்புவர்கள் யார் என்பதையும் அறிவேன். அகிலேஷுக்காக நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் வேறு எதுவும் இல்லை. தொண்டர்களை மட்டுமே உடன் வைத்துள்ளேன். எமெர்ஜன்சி காலக்கட்டங்களில் நான் சமாஜ்வாதியை அமைத்தேன் அப்போது அகிலேஷுக்கு 2 வயது. அகிலேஷ் தற்போது முதல்வராக உள்ளார். அடுத்த முறையும் அவரே முதல்வராக பதவியேற்பார். மோசமான நபர்களை அகிலேஷ் ஏன் பின் தொடர வேண்டும். சர்ச்சைக்குள் தன்னிச்சையாக சென்று ஏன் சிக்க வேண்டும்? என்ன நடந்தாலும் கட்சிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். சமாஜ்வாதியின் வளர்ச்சிக்காக சிவ்பால் கடுமையாக பாடுபட்டவர். அவசரநிலை காலத்தில் அவர் கட்சிக்காகஉழைத்திருக்கிறார். அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலையை கண்டு தொண்டர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சமாஜ்வாதி போராட்டத்தில் இருந்து தான் பிறந்தது. 

எனவே தொண்டர்கள் கவலை அடையத் தேவையில்லை. கட்சியின் ஒற்றுமைக்கும் எந்த பங்கமும் ஏற்படாது. ஒருபோதும் கட்சியை இரண்டாக உடைய விட மாட்டேன் என முலாயம் சிங் யாதவ் கூறினார்.

கடந்த சில மாதங்களாக சமாஜ்வாதி கட்சிக்குள் உட்பூசல் வெடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News