மகாபாரதத்தில் வரும் பீஷ்மரைப் போல அமைதியாக இருந்து தவறு செய்யாதீர்கள்: சுஷ்மா ஸ்வராஜ்

உங்கள் கண்முன்னால் தவறு நடக்கிறது. மகாபாரதத்தில் வரும் பீஷ்மரைப் போல அமைதியாக இருந்து தவறு செய்யாதீர்கள் என முலாயம் சிங்க்கு ட்வீட் செய்த சுஷ்மா ஸ்வராஜ்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Apr 15, 2019, 05:36 PM IST
மகாபாரதத்தில் வரும் பீஷ்மரைப் போல அமைதியாக இருந்து தவறு செய்யாதீர்கள்: சுஷ்மா ஸ்வராஜ்
Photo: PTI

டெல்லி: பாஜக சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவை தரக்குறைவாக விமர்சித்த சமாஜ்வாதி தலைவர் ஆசம் கானுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் அஸாம் கானுக்கு எதிராக பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதாவை போட்டியாக நிறுத்தப்பட்டு உள்ளார். சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் ராம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அஸாம் கான், இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். அவருக்கு இந்த தொகுதி குறித்து அனைத்தையும் அறிமுகப்படுத்தினேன். ராம்பூர் மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால் நான் அவரின் உள்ளாடை காக்கி என்பதை வெறும் 17 நாட்களில் அறிந்துகொண்டேன் என்றார்.

ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கை குறிப்பிட்டு, "மகாபாரதத்தில் வருவது போல திரௌபதியின் சேலை உங்கள் கண்முன்னால் இழுக்கப்பட்டிருக்கிறது. பீஷ்மரைப் போல அமைதியாக இருந்து தவறு செய்யாதீர்கள்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.