காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடுகிறது CWC கூட்டம்...

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது!!

Last Updated : Aug 10, 2019, 07:48 AM IST
காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடுகிறது CWC கூட்டம்... title=

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது!!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்களவையில் பெறமுடியாமல் சென்றது. முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெறமுடியாமல் சென்றது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு   பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. 

ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா முடிவில் ஸ்திரமாக உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கூடும் என தகவல் வெளியாகியது. இதனிடையே பிரியங்கா தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், பிரியங்கா காந்தி கட்சி தலைமை பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக இனி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுலுக்கு அடுத்தப்படியாக யார்? ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது. சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் , மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இந்த தலைவர்கள் தனித்தனியாக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய தலைவராக யாரை தேர்வு செய்வது என்று விவாதித்துள்ளனர். 

நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகுல் வாஸ்னிக், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின்பைலட் உள்ளிட்டோரின் பெயர்களை மூத்த தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மன்மோகன்சிங் அல்லது பிரியங்கா தலைமை ஏற்க வேண்டும் என்றும் சிலர் கோரி வருகின்றனர். இன்றைய காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Trending News