வெளிநாடு செல்ல விரும்பிய வாலிபர் பரிதாப பலி!

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய வடநாட்டு வாலிபர் பெங்களூருவில் பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார்!

PTI | Updated: Feb 2, 2018, 11:26 PM IST
வெளிநாடு செல்ல விரும்பிய வாலிபர் பரிதாப பலி!
Representational image

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய வடநாட்டு வாலிபர் பெங்களூருவில் பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார்!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் 35 வயதான சுரிந்தர் பால். இவர் கனடாவிற்கு செல்ல விரும்பி பெங்களூருவில் இருக்கும் முகவர் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் தன்டாவின் கல்யானபூர் பகுதியை பூர்விகமாக கொண்ட இவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கடந்த டிச., 3 ஆம் நாள் ஹர்மிந்தர் சிங், ஜெ டி பட்டேல், சஞ்ஜீவ், நரேஷ் படேல் ஆகியோர் சுரிந்தர் பாலை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவரை கனடாவிற்கு அனுப்பாமல் பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறைய நாட்களாகியும் அவரை கனடாவிற்கு அனுப்பாமல் அவர்கள் அலகழித்துள்ளனர். பின்பு அவரின் தொடர்பு அவரது குடும்பத்தாருடன் தடைப்பட்டு போக, சுரிந்தர் பாலின் மாமா கோபிந்த் சிங் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பாலின் குடும்பத்தாருடன் காவல்துறையினர் பேங்களூர் சென்று அவரை தேடுகையில், சுரிந்தரின் சடலம் மட்டுமே அவர்களால் மீட்கப்பட்டது.

இதனையடுத்து அவரை அழைத்துச் சென்ற முகவர் குழுவினை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மீது IPC பிரிவு 420-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சுரிந்தர் சிங் எவ்வாறு கொல்லப்பட்டார், என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!