உத்தரபிரதேசத்தின் மீரட்டில் உள்ள புகழ்பெற்ற பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நீண்ட காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்..!
அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் மீரட்டில் (Uttar Pradesh, Meerut) உள்ள புகழ்பெற்ற பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நீண்ட காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் சம்பளத்தை கோரும் போது பெண் ஆசிரியர்களுடன் அநாகரீகமாக நடந்து கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல், சில ஆசிரியர்களை பாலியல் துஷ்பிரயோகம் (sexual abuse) செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளதோடு, பெண்களுக்கான கழிப்பறைகளில் உளவு கேமராக்களையும் நிர்வாகம் நிறுவியுள்ளது என்று கூறியுள்ளனர். இது தவிர, சில ஆசிரியர்கள் ஒரு பெண் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வராதபோது, அவர்கள் சூனியத்தின் (witchcraft) உதவியையும் எடுத்துக்கொள்கிறார்கள் என்று கூறினார்.
ALSO READ | அதிகரிக்கும் COVID-19 பாதிப்பு... இந்த நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!!
மீரட்டின் சதர் பஜாரில் அமைந்துள்ள ரிஷாப் அகாடமி பள்ளியின் (Rishabh Academy School) பெண் ஆசிரியர்கள் பள்ளிச் செயலாளர் ரஜ்னீத் ஜெயின் மற்றும் அவரது மகன் அபினவ் ஆகியோர் சம்பளம் வழங்கவில்லை என்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ரஞ்சீத்தும் அவரது மகனும் பெரும் தொகை மோசடியில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு நேரும் கொடுமை குறித்த புகாரை பதிவு செய்ய காவல் நிலையத்திற்குச் சென்றனர். ஆசிரியர்களின் புகாரின் படி, ரஞ்சித் மற்றும் அபிநவ் ஆகியோர் பள்ளியின் கழிப்பறையில் கேமராக்களை நிறுவியுள்ளனர் மற்றும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களையும் படங்களையும் எடுத்துள்ளனர். தந்தை-மகன் இரட்டையர்கள் இப்போது இந்த படங்களையும் வீடியோக்களையும் பிளாக்மெயில் செய்ய பயன்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் அவர்களுடன் உடல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகவும் ஆசிரியர்கள் கூறினர்.