ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ மீது 5 ஆண்டுகள் தடை

இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Last Updated : Nov 16, 2016, 11:37 AM IST
ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ மீது 5 ஆண்டுகள் தடை title=

மும்பை: இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பீஸ் டிவி நடத்திவரும் ஜாகீர் நாயக், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் வெளிநாட்டு எப்சிஆர்ஏ இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவரின் ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' எனப்படும் என்.ஜி.ஓ., அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Trending News