‘டிக் டாக்’ செயலிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

‘டிக் டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Updated: Apr 15, 2019, 01:40 PM IST
‘டிக் டாக்’ செயலிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

‘டிக் டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கடந்த சில நாட்களுக்கு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், TikTok செயலியை இளைஞர்கள் பலர் தவறான  செயலுக்கு பயன்படுத்துவதாகவும், அதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் நேரிடுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இளைஞர்கள் நலன் கருதி TikTok செயலிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும்  நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும், அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

TikTok செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  அந்த செயலியை முழுமையாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இந்நிலையில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 க்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.