கேரளா: மருத்துவமனைக்கு அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாமல் அலட்சியமாக கார் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பெரும்பாவூரில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றபோது, முன்னே சென்ற கார் ஒன்று ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்றுள்ளது.
ஆம்புலன்ஸ்-ன் ஓட்டுநர் வழிவிடுமாறு கோரிக்கை விடுத்தும், முன்சென்றவர் இவரை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக வழிமறித்துச் சென்றுள்ளார்.
ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இக்காட்சிகளை படம்பிடித்து காவல்துறையிடம் அளித்துள்ளார்.
#WATCH: Car driver booked for allegedly refusing to make way for an ambulance speeding through #Kerala's #Perumbavoor carrying a new-born. pic.twitter.com/wy5TPY47Sa
— ANI (@ANI) October 20, 2017
இவரின் புகாரின் அடிப்படையில் வழிமறித்துச் சென்ற வாகன ஓட்டியின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.