மேகதாது அணை விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.....
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது....