எலும்பு - மூளை - இதயத்தை பாதிக்கும் விட்டமின் D குறைபாடு... ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

வைட்டமின் டி, கால்சிஃபெரால் என்றும் அழைக்கப்படுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின், உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி  உதவுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2023, 05:34 PM IST
  • வைட்டமின் D எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.
  • எலும்புகளில் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள்.
எலும்பு - மூளை - இதயத்தை பாதிக்கும் விட்டமின் D குறைபாடு... ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்! title=

வைட்டமின் டி பல உடல் செயல்பாடுகளைச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி  உதவுகிறது. வைட்டமின் டி புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைக்கலாம், தொற்றுநோயைத் தடுக்கலாம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதில் வைட்டமின் டியின் முக்கிய பங்கு உள்ளது. நம் உடலில் வைட்டமின் D எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. அது நம் உடலில் எப்போது குறைகிறது மற்றும் உடலில் வைட்டமின் D அளவை எவ்வாறு சரி செய்வது என்பதை அறிந்து கொள்வது அவசியம். வைட்டமின் டி குறைபாட்டின் சில அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி குறைபாட்டினால் உண்டாகும் பாதிப்புகள்

உடலில் வைட்டமின் டி குறைபாடு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும், இது நினைவாற்றல் இழப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது, கடுமையான ஆஸ்துமாவை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறைந்த அளவு வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

தூக்கமின்மை

குறைந்த அளவு கால்சிஃபெரால் உங்கள் தூக்க முறைகளை பாதிக்கலாம், ஏனெனில் இந்த வைட்டமின் குறைபாடு மன அழுத்த ஹார்மோன் அல்லது கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் அடிக்கடி சோர்வடைய வாய்ப்புள்ளது. வைட்டமின் டி குறைபாடு மன ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, நினைவாற்றலையும் பெரிதும் பாதிக்கும்.

எலும்புகளில் வலி

வைட்டமின் D  குறைப்பட்டின் மிக முக்கிய அறிகுறிகளில் ஒன்று எலும்பு மூட்டுகளில் வலி. வைட்டமின் டி குறைபாடு காரணமாக, ஒரு நபர் எலும்பு வலி, தசை பலவீனம், குறைந்த எலும்பு நிறை மற்றும் எலும்பு முறிவுகளை அனுபவிக்கிறார். குறைந்த வைட்டமின் டி காரணமாக எலும்புகளில் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனென்றால் பலவீனம் காரணமாக எலும்புகள் ஒடிந்து போகலாம். அலது கீழே விழும் வாய்ப்புகளும் அதிகமாகலாம்.

மேலும் படிக்க | தொப்பையை 10 நாளில் பாதியாக குறைக்கும் பிளாங்க் பயிற்சி... எளிதாக செய்யும் முறை..!

அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

வைட்டமின் டி குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு சகதி பெரிதும் குறைவதால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை ஏற்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதன் முக்கிய பங்கு காரணமாக, வைட்டமின் டி குறைபாடு உடலில் பலவிதமான நோய்க்கிருமிகள் அதிகரிக்கிறது. குறைந்த அளவு வைட்டமின் டி உள்ளவர்கள் சளி, ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மனச்சோர்வு

மனச்சோர்வின் ஆரம்பம் பல காரணங்களால் ஏற்படலாம். அதில் வைட்டமின் டி குறைபாடு அவற்றில் ஒன்றாகும். வைட்டமின் டி மற்றும் மனநலம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், பலர் இதற்கு தொடர்பு இருத்தை அறியாமல் இருக்கிறார்கள். மனச்சோர்வின் அறிகுறிகளுக்கும் குறைந்த அளவு வைட்டமின் டிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

முடி உதிர்தல்

மயிர்க்கால்களைத் தூண்டி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் வைட்டமின் டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு மோசமான மற்றும் குன்றிய முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதிக அளவில் முடி இழப்புக்கு வழிவகுக்கிறது. குறைந்த அளவு வைட்டமின் டி புதிய முடியின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ள நபர்கள்

பெருங்குடல் அழற்சி அல்லது குடல் அழற்சி நோய் உள்ளவர்களுக்கு இந்த அத்தியாவசிய வைட்டமின் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் அவர்களின் குடல் அமைப்பு வைட்டமின்களை உறிஞ்சாது. உடல் பருமன் உள்ளவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு வைட்டமின் டி இருக்கும். ஏனெனில் இந்த நபர்களில் வைட்டமின் டி கொழுப்பு திசுக்களில் சேமிக்கப்படுகிறது. இவை தவிர, சமீபத்தில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் குறைந்த அளவு வைட்டமின் டி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க |  ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால் என்ன ஆகும்... நிபுணர்கள் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News