மாநிலங்களவையில் மீண்டும் இன்று முத்தலாக் சட்ட மசோதா தாக்கல்....

மாநிலங்களவையில் மீண்டும் இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா குறித்த விவாதம்...

Last Updated : Jan 2, 2019, 07:06 AM IST
மாநிலங்களவையில் மீண்டும் இன்று முத்தலாக் சட்ட மசோதா தாக்கல்.... title=

மாநிலங்களவையில் மீண்டும் இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா குறித்த விவாதம்...

முத்தலாக் தடைச் சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை மேற்கொள்ளும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா, கடந்த 17ஆம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 245 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில்,மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.

இந்த மசோதாவை எதிர்க்கப்போவதாக அதிமுக, தெலுங்குதேசம், திமுக, காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகும்படி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.தற்போது மாநிலங்களவையில் ஆளும் பாஜக தலைமையிலான அணிக்கு 93 உறுப்பினர்களே ஆதரவாக உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர். இதர கட்சிகளின் உறுப்பினர்கள் 39. ஓரிடம் காலியாக உள்ளது. 

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி லோக்சபாவில், நிறைவேறியது. ராஜ்யசபாவில், இந்த மசோதாவை, மத்தியசட்ட அமைச்சரும், BJP மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால், விவாதம் நடக்காமல், நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு நேற்று புத்தாண்டு விடுமுறை என்பதால், இன்று மீண்டும் இந்த மசோதா மீதான விவாதம் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News