மூன்று முறை தலாக் விவாகரம் முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என அலாகாபாத் ஐகோர்ட் கண்டித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் நடைமுறையிலுள்ள மூன்று முறை தலாக் விவாகரம் சட்டத்திற்கு விரோதமானது என அலாகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாம் தனி நபர் சட்ட வாரியம் ஏற்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் பெண்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் ஓன்று சேர்ந்துள்ளன.
இதுகுறித்த வழக்கு ஒன்றை இன்று அலாகாபாத் ஐகோர்டில் நடைபெற்று வருகிறது. அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறுகையில், இது முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என கண்டித்துள்ளது. மேலும் மும்முறை தலாக் நடைமுறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், இந்திய அரசியல் சாசனத்தைவிடவும், தனி நபர் சட்ட வாரியம் உயர்ந்தது இல்லை எனவும் நீதிபதி கூறினார்.