டெல்லி என்கவுண்டரில் 2 குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது

டெல்லியின் பிரகலாத்பூர் பகுதியில் இன்று அதிகாலையில் 2 குற்றவாளிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Updated: Feb 17, 2020, 09:28 AM IST
டெல்லி என்கவுண்டரில் 2 குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது

டெல்லியின் பிரகலாத்பூர் பகுதியில் இன்று அதிகாலையில் 2 குற்றவாளிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க, காவல்துறையின் சிறப்புக் படைவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்தவக்யில் இன்று அதிகாலை பிரகலாத்பூரில் சிறப்பு படை போலீசார், குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றனர்.

இதனையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 பேர் பலத்த காயமடைந்து விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

ராஜா குரேஷி மற்றும் ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்ட இரண்டு குற்றவாளிகள் அதிகாலை 5 மணிக்கு டெல்லி போலீஸ் சிறப்பு கலத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.