முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி, இந்த தேதி வெளிவருகிறது LIC IPO: முக்கிய அம்சங்கள் இதோ

LIC IPO: எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2022, 05:16 PM IST
  • எல்ஐசி ஐபிஓ-வின் வெளியீட்டு அளவு ரூ.63,000 கோடி வரை இருக்கும்.
  • வெளியீட்டு விலை ரூ 2000-2100 க்கு இடையில் இருக்கக்கூடும்.
  • பாலிசிதாரர்களுக்கு 3.16 கோடி பங்குகள் கையிருப்பில் உள்ளன.
முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி, இந்த தேதி வெளிவருகிறது LIC IPO: முக்கிய அம்சங்கள் இதோ title=

எல்ஐசி ஐபிஓ புதுப்பிப்பு: பட்ஜெட் உரையில் எல்ஐசியின் ஐபிஓ குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் வழங்கியதிலிருந்து, முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீங்களும் எல்ஐசியின் ஐபிஓவுக்காகக் காத்திருந்தால், அந்த காத்திருப்பு விரைவில் முடியவுள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ மார்ச் 10 ஆம் தேதி துவக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பேஸ் ப்ரைஸ் ரூ. 2100 ஆக இருக்கக்கூடும் 

எல்ஐசியின் ஐபிஓ பற்றி அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நிறுவனத்தின் வெளியீட்டு விலை ரூ 2000-2100 க்கு இடையில் இருக்ககூடும். ஞாயிற்றுக்கிழமை செபியிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவின்படி, எல்ஐசியின் வெளியீட்டின் அளவு ரூ.63,000 கோடி வரை இருக்கும்.

மார்ச் 14 வரை சப்ஸ்க்ரைப் செய்யலாம்:

மார்ச் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஐபிஓ-வுக்கு, மார்ச் 14 ஆம் தேதி வரை சப்ஸ்கிரைப் செய்ய அவகாசம் இருக்கும் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன. எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும். எல்ஐசியின் ஐபிஓ தொடர்பான 10 முக்கிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | LIC IPO: இதில் முதலீடு செய்ய அனைவரும் காத்திருக்கும் காரணம் என்ன? விவரம் இதோ 

எல்ஐசி ஐபிஓ பற்றிய முக்கிய அம்சங்கள்

- எல்ஐசி-யின் வெளியீடு தொடங்கும் நாள்: 10 மார்ச் 2022 (எதிர்பார்க்கப்படுகிறது)

-  எல்ஐசி-யின் இஷ்யூ சப்ஸ்கிரிப்ஷன் : 14 மார்ச் 2022 (எதிர்பார்க்கப்படுகிறது)

- எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு விலை: ஒரு பங்கிற்கு ரூ.2,000-2,100

- ஒரு லாட்டில் 7 பங்குகள் வரை இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன

- வெளியீட்டு அளவு: 31,62,49,885 பங்குகள்

- தள்ளுபடி: ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் 10% தள்ளுபடி பெறுவார்கள்

- பிரைஸ் பேண்ட் அறிவிப்பு: மார்ச் 7

- ஆங்கர் முதலீட்டாளர்கள் ஒதுக்கீடு: மார்ச் 9

- ஊழியர்களுக்கு 1.58 கோடி பங்குகள் கையிருப்பாக உள்ளன. இது 10% தள்ளுபடியில் ரூ.1,890க்கு  கிடைக்கும்.

பாலிசிதாரர்களுக்கு ரூ.16 கோடி பங்குகள் கையிருப்பில் உள்ளன. இந்த பங்குகளும் ரூ.1,890க்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | LIC IPO மிக விரைவில்? பங்கு விற்பனைக்கான ஆவணங்கள் தாக்கல்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News