ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, இஸ்ரோ உதவியுடன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 7,254 ஆளில்லா ரயில்வே கிராஸிங் உள்ளன. இவற்றை கடந்து செல்லும் போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலர் ரயில் வருவதை கவனிக்காலமல் விபத்தில் சிக்கி பலியாகின்றனர்.
இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க ஆளில்லா கிராஸிங்குளிலும் ரயில் இன்ஜின்களிலும் எச்சரிக்கை கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய ரயில்வே இஸ்ரோ உதவியுடன் புதிய கருவிகளை உருவாக்கியுள்ளது.
இக்கருவிகள் ரயில்வே கிராஸிங்குகளில் அமைக்கப்படும் போது, ரயில் 500 மீட்டருக்கு அப்பால் வரும்போது எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.
இதன் மூலம் ரயில்களின் இயக்கமும் துல்லியமாக கண்காணிக்கப்படும். டெல்லி மற்றும் மும்பை இடையேயான ரயில் பாதையில் இந்த திட்டத்தை அமல்படுத்தப்பட்டு பின் நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.