உத்திர பிரதேச காவல்துறை குச்சியை குதிரையா மாத்தி சவாரி: வீடியோ

உ.பி. காவல்துறை சேர்ந்த வீரர்கள் தடியின் உதவியுடன் "குதிரை சவாரி" செய்வதை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 13, 2019, 06:01 PM IST
உத்திர பிரதேச காவல்துறை குச்சியை குதிரையா மாத்தி சவாரி: வீடியோ title=

ஃபிரோசாபாத்: உத்தரபிரதேச காவல்துறையினரின் (Uttar Pradesh Police) பயிற்சி குறித்து வீடியோ (Video) ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் (Social Media) பெரும் வைரலானது. தற்போது மீண்டும் உத்தரபிரதேச போலிசாரின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் போலீசார் கையில் இருக்கும் குச்சியை குதிரையா மாற்றி சவாரி செய்கிறார்கள். ஆம் இது உண்மை தான். அந்த காணொளியை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு உண்மை புரியும். இதுபோன்ற வித்தியாசமாகவும், மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத செயல்களை செய்வது உ.பி. போலீசாருக்கு கைவந்த கலைதான். ஏனென்றால் இவர்களின் பயிற்சி குறித்து சில பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த காணொளியை சரியாக பார்த்தீர்கள் என்றால், உ.பி. காவல்துறை சேர்ந்த வீரர்கள் தடியின் உதவியுடன் "குதிரை சவாரி" செய்வதை காணலாம். உண்மையில், ஃபிரோசாபாத்தில் உ.பி. போலீசாருக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. ​​

காவல் துறையின் இந்த பயிற்ச்சியை பார்த்தால், கவலை படுவதா? அல்லது சிரிப்பதா? என்றே தெரியவில்லை.... நீங்களும் அந்த காணொளியை பாருங்கள்..!!

 

உ.பி. காவல்துறையினருக்கு குதிரை சவாரி எப்படி செய்வது என்று பயிற்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் பயிற்சி அளிக்க குதிரை இல்லாததால், ​​அவர்கள் தங்கள் கால்களுக்கு இடையில் ஒரு குச்சியை மாட்டிக்கொண்டு, அதை தங்கள் குதிரையாக நினைத்துக்கொண்டு சவாரி பயிற்ச்சி பெற்றனர்.

சுஹாகனக்ரி ஃபிரோசாபாத்தில் நடத்த உத்தரபிரதேச காவல்துறையினரின் போலி குதிரை பயிற்சி குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச காவல்துறையினரின் வித்தியாசமான பயிற்ச்சி காரணமாக செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். 

கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் பயிற்சியில் தோல்வியடைந்த உ.பி. போலீஸ்: VIDEO

கடந்த அக்டோபர் மாதம், உத்தரபிரதேச காவல்துறையினருக்கு பல்லியாவில் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசும் பயிற்ச்சி அளிக்கப்பட்டது. அப்பொழுது நடந்த பயிற்சியின் போது, ​​காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச முயன்றனர். ஆனால் துப்பாக்கி செயலிழந்துவிட்டது. இந்த சம்பவம் மூலம் உ.பி. போலீசாரின் செயல்திறன் வெளிச்சத்துக்கு வந்தது. இதுக்குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.

Trending News