குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேறியதை அடுத்து வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஹவுராவில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதனையடுத்து ஹவுராவில் வன்முறைகளை கட்டுப்படுத்த இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இன்டர்நெட் சேவை இன்று மாலை 5 மணி வரை துண்டிக்கப்பட்டுள்ளது.