பருவமழை காலத்தில் விலைவாசி உயர்வு வழக்கமானது :அருண் ஜெட்லி

Last Updated : Jul 28, 2016, 04:59 PM IST
பருவமழை காலத்தில் விலைவாசி உயர்வு வழக்கமானது :அருண் ஜெட்லி  title=

லோக்சபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.

விலைவாசி உயர்வை குறித்து ஜெட்லி பேசியதாவது: பருவமழைக்கு முன்னர் விலைவாசி உயர்வு வழக்கமானது. காங்கிரஸ் ஆட்சியில் கொள்கை முடக்கம் ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஒட்டுமொத்த பணவீக்க குறியீடு காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக இருந்தது, பா.ஜ..க ஆட்சியில் பணவீக்கம் குறைவாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு சென்ற போது, விலைவாசி உயர்வு உச்சத்தில் இருந்தது. தற்போது மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது.

பருப்பு தொடர்பாக ராகுல் கூறிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது. தேவை மற்றும் இருப்பு ஆகியவை தான் விலையை நிர்ணயிக்கிறது. பருவமழைக்கு முன்னர் விலைவாசி உயர்வு வழக்கமானது. 

கடந்த இரண்டு வருடங்களில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு பிரதமர் தலைமையில் ஆட்சியில் கிடைத்த முதலீடு காரணம் எனக்கூறினார்.

Trending News