ஆந்திரா மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும்போது பாதி வழியிலேயே குழந்தை பெற்ற பெண்...!
ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில், சாலை வசதி இல்லாத ஒரு கிராமத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சமபவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ANI தகவலின், நிறைமாத கர்ப்பிணியை அவரது உறவினர்கள் ஒரு தொட்டி போன்ற ஒன்றை அமைத்து அதல் அவரை உட்காரவைத்து தொழில் அவரை தூக்கி சென்றுள்ளனர். கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் 7 கிலோமீட்டர் தொலைவை கடக்க வேண்டும். இந்நிலையில், அந்த பெண்ணை தூக்கிச் செல்லும் வழியிலேயே அவருக்கு இடுப்பு வலி அதிகமாகி குழந்தை பிறந்துள்ளது.
#WATCH: A pregnant woman being carried by her relatives through a forest for 4 km in Vijayanagaram district due to lack of road connectivity. Hospital was 7 km away from the village but she delivered midway & returned. Both the baby & the mother are safe. (4.9.18) #AndhraPradesh pic.twitter.com/fvGZlYwDCl
— ANI (@ANI) September 7, 2018
தூகித்சென்றுள்ள வழியிலேயே குழந்தை பிறந்ததால், மீண்டும் அவரை வீட்டுக்கே கூட்டி சென்றுள்ளனர். குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.