கேரளாவை சேர்ந்த 96 வயதுடைய பாட்டி அக்ஷரலக்ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்....
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்ஷரலக்ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய கார்த்தியானி அம்மாள் என்ற மூதாட்டி 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த தேர்வு சமீபத்தில் கேரளாவின் பல இடங்களில் நடந்தப்பட்டது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர். தேர்வில் பங்கேற்ற 40 ஆயிரத்து 440 பேரில் கார்த்தியானி அம்மாள் தான் மிக வயதான மாணவி. இந்த தேர்வில் சிறையில் இருந்தபடி படித்து வந்த 8 கைதிகளும் தேர்வெழுதினார்கள். கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சேர்ந்ததாக கார்த்தியானி அம்மாள் தெரிவித்தார்.
ஆலப்புழா மாவட்டம், கனிச்சநல்லுார் அரசு பள்ளியில், 45 பேர் தேர்வெழுதினர். அவர்களில், கார்த்தியாயினி, 96, என்ற பாட்டி, ஆங்கிலத்தில் வாசிக்கும் தேர்வில், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முயற்சிக்கும்ன் சாதனைக்கும் வயது ஒரு பெரிய பொருட்டே அல்ல’ என்பதை இவர் நிரூபித்துள்ளார்.
Kerala:At 96 yrs,Karthiyani Amma of Alappuzha Dist.scores 98/100 marks in 'Aksharalaksham' literacy program of Kerala State Literacy Mission.She was the oldest student appearing for the exam. Approx 42933 ppl cleared the exam who were tested on skills incl. reading, writing&maths pic.twitter.com/edvcKywmf4
— ANI (@ANI) October 31, 2018