Empowerment: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு பாலின சமத்துவம் அதிகம்

Gender Equality In Tamil Nadu: இந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களில் தமிழ்நாட்டு பெண்களுக்கு பாலின சமத்துவம் இருக்கிறது என்பது தாய் தமிழ்நாட்டின் பெருமை என்று தோள் உயர்த்திச் சொல்லலாம். நம் நாட்டில், அதிகம் பெண் தொழிலாளர்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2023, 03:31 PM IST
  • தலைநிமிர்ந்து நின்று தமிழச்சி என்று சொல்லலாம்
  • பாலின சமத்துவத்தில் தலை நிமிரும் தமிழ்நாடு
  • தொழிற்சாலைகளின் வேலை பார்க்கும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம்
Empowerment: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு பாலின சமத்துவம் அதிகம் title=

சென்னை: இந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களில் தமிழ்நாட்டு பெண்களுக்கு பாலின சமத்துவம் இருக்கிறது என்பது தாய் தமிழ்நாட்டின் பெருமை என்று தோள் உயர்த்திச் சொல்லலாம். நம் நாட்டில், அதிகம் பெண் தொழிலாளர்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் என பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையம் CEDA வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. 

பாலின சமத்துவத்தில் தலை நிமிரும் தமிழ்நாடு என்பதால், தலைநிமிர்ந்து நின்று தமிழச்சி என்று சொல்லலாம் என்ற ஊக்கத்தைக் கொடுக்கும் பகுப்பாய்வு ஒன்றில், தொழிற்சாலைகளின் வேலை பார்க்கும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த புள்ளி விவரத்தில் இடம் பெற்று இருக்கும் தகவல்களின்படி, தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வறுமை ஒழிப்பு, ஐடி துறை, கல்வி, தொழிற்துறை, ஆராய்ச்சி துறை, ஏற்றுமதி, உற்பத்தி என்று பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் ஆகும். 

நாட்டின் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு பல மடங்கு முன்னேறி உள்ளது. ஜிடிபியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என்பதும் நமக்கு பெருமை தான். அசோகா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கும் Centre for Economic Data and Analysis (CEDA) என்ற அறிக்கையில் இந்த தரவுகள் காணப்படுகின்றன. 

இந்தியாவில் தொழிற்சாலைகளில், தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாலின சமத்துவம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 80 லட்சம் என்றால், அதில் 5% என்ற அளவில் கூட பெண்கள் இல்லை. 

தொழிற்சாலைகளில் பொதுவாக பெண்கள் பணிக்கு சேர்க்கப்படுவது இல்லை. இதற்கான பயிற்சியும் பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லை. பெதுவாக பெண்களுக்கான வேலைகளில் தொழிற்சாலை பணிகள் பரிசீலிக்கபடுவதில்லை. 

மேலும் படிக்க | கருவுறுதலில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் 

ஐடி போன்ற துறைகளைத் தவிர, இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளில் 1.6 மில்லியன் பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அதில் 0.68 மில்லியன் பேர் தமிழ்நாட்டில் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அதாவது இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மொத்த பெண்களில் 43 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் இருந்துதான் வேலை பார்க்கிறார்கள்.

அதிலும், இந்தியத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களில் 72 சதவிகிதம் மகளிர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய தென் மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். 

டெல்லியில் தொழிற்சாலை ஊழியர்களாக இருப்பவர்களில் வெறும் 4.7 சதவிகிதம் பெண்கள் எ
மேற்கு வங்கத்தில் தொழிற்சாலை ஊழியர்களாக வேலை பார்க்கும் பெண்களின் சதவிகிதம் 5.5 
மஹாராஷ்டிராவில் தொழிற்சாலை ஊழியர்களாக வேலைபார்க்கும் மகளிர் 12 சதவிகிதம் 
உத்தரப் பிரதேசத்தில் தொழிற்சாலை ஊழியர்களாக வேலை பார்க்கும் பெண்களின் சதவிகிதம் 5.7 

இந்தியாவில் பெண்கள் சமத்துவம் மோசமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. தொழிற்சாலைகளில் பெண்களுக்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. அவர்களுக்கான போதிய பயிற்சி வழங்கப்படுவது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பாலின சமத்துவம் சரியாக உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | Healthy Tips: தினமும் அதிகாலை வெந்நீர், ஆஹா பலன்கள் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News