'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்' விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது ZEE News, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது!
தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கரண் சிங் யாதவ் ஆகியோரது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்கு எதிராக முழக்கங்களை பிரச்சார கூட்டத்தில் எழுப்பியதற்கு; எதிர்ப்பு தெரிவிக்காமல் கட்சி கூட்டத்தினை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பிரச்சாரத்தில் நடந்த விவரங்களையும், அதன் விளைவால் ஏற்பட்ட பிரச்சணைகளை குறித்தும் ZEE News விளக்கமாக தேர்தல் ஆணையத்திற்கு விளக்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குறிய கோஷங்கள் எழுப்பப்பட்ட பிரச்சார கூட்டத்தின் முழுவீடியோவின் பகுதியை கொண்ட வன்தட்டினையும் இந்த புகார் மனுவுடன் இணைத்துள்ளது ZEE News. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Filed a complaint to the Election Commission of India against @INCIndia in the Navjot Sidhu-Pakistan Zindabad case. Sharing a copy with all of you. @ZeeNews is committed to taking this case to a logical conclusion. pic.twitter.com/Lzb4regCsM
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) December 6, 2018
'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்' விவகாரம்...
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து ஈடுப்பட்டார். அப்போது பிரச்சாரத்தில் அவர் உரையாற்றிய போது இந்தியாவிற்கு எதிராக "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தற்போது ஊடகங்களுக்கு பெரும் விவாதப் பொருளாய் மாறியுள்ளது.
இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் இந்த வீடியோவானது ZEE News-ஆல் சித்தரிக்கப்பட்டவை, போலி வீடியோ என பொய் குற்றச்சாட்டினை முன்வைத்தது. இந்த குற்றச்சாட்டினை குறித்து களையவும், உண்மையினை வெளிக்கொனரவும் ZEE News, சித்துவின் அல்வார் பேரணியில் கலந்து கொண்ட பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டது. குறிப்பிட்ட பேரணியின் போது பத்திரிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்ட 7 வெவ்வேறு வீடியோக்களை ZEE News பெற்று ஆய்வு நடத்தியது. ஆய்வில் காங்கிரஸின் குற்றச்சாட்டு பொய் என வெளியானது. இந்த விவகாரம் தற்போது அனைத்து ஊடகங்களுக்கும் விவாத பொருளாய் உருமாறியுள்ளது.