IPL பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறலாம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து அறிவிப்பு..! 

Last Updated : Apr 12, 2018, 01:43 PM IST
IPL பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறலாம்!  title=

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என சி.எஸ்.கே அணி போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடக்கும் IPL போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், தடை செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை மீறி போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியிலும் தமிழக இளைஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வைகையினில் வீரர்களின் மீது காலணிகளை வீசினர். எனினும் பெரும் சர்சைக்கிடையில் போட்டிகள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் சென்னையில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைப்பெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைகள் தொடங்கவிருந்த நிலையில் தற்போது இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் நடக்கவிருக்கும் IPL போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் வரும் 20-ஆம் தேதி போட்டிகளுக்கான டிக்கெட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா, 'ஐ.பி.எல் போட்டிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால், போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுகிறது' என்று தெரிவித்தார்.

 இதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் தங்களின் பணத்தை திரும்ப பெறலாம் என தெரிவித்துள்ளனர்.சி.எஸ்.கே அணி போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து 20-ம் தேதிக்குள் 6 போட்டிக்கான டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம், அதன் பின் பணம் திருப்பி தரமாட்டாது எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Trending News