ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது.
ஐபிஎல் 2018 தொடரில் பங்கேற்க வார்னர், ஸ்மித்க்கு தடை -பிசிசிஐ
இதைக்குறித்து விசாரித்த போது, கேமரான் பேங்கிராப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார். இது தங்களுக்கு தெரிந்து தான் நடந்தது. அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என ஸ்டீவன் ஸ்மித்தும் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும், கேமரான் பேங்கிராப்ட்போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்தது ஐசிசி.
நேற்று, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. தடையை அடுத்து ஹைதராபாத் சன்ரைஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை விலகினார். அவர் விலகியதை அடுத்து ஹைதரபாத் அணியின் கேப்டன் யார் என்பது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
சன்ரைஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வார்னர்
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டதாக ஐதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Kane Williamson has been appointed as captain of SunRisers Hyderabad for IPL 2018. pic.twitter.com/b5SMK8086U
— SunRisers Hyderabad (@SunRisers) March 29, 2018
ஐபிஎல் 2018: ஆட்டம் போட வைக்கும் சிஎஸ்கே ரிட்டன்ஸ் பாடல் வீடியோ!!