IPL 2018 தொடரின் 56-வது போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 56-வது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. புனே மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து விளையாடியது.
பஞ்சாப் அணியின் தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய KL ராகுல் 7(11), கெயில் 0(2) அடுத்தடுத்து வெளியேற பஞ்சாப் அணியின் தடுமாற்றம் ஆரம்பத்திலேயே துவங்கியது.
எனினும் மனோஜ் திவாரி 35(30), கருன் நாயர் 54(26) நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். இதர வீரர்கள் வந்த வேகத்தில் விடைப்பெற்றனர், இதனால் பஞ்சாப் அணி ஆட்டத்தின் 19.4 -வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும், சுரேஷ் ரெய்னா 61(48) மற்றும் தீபக் சரூர் 39(20) ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் சென்னை அணி ஆட்டத்தின் 19.1-வது பந்தில் வெற்றி இலக்கினை எட்டியது.
இந்த போட்டியில் தோல்வியி அடைந்ததை அடுத்து பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் செவ்வாய் அன்று இறுதி போட்டிக்கான தகுதி போட்டி 1-ல் சென்னை மற்றும் ஐதராபாத் அணியும், புதன் அன்று தகுதி போட்டி 2-ல் கொல்கத்தா மற்றும் ராஜஷ்தான் அணிகளும் மோதுகின்றன.