காரடையான் நோன்பு அடை செய்முறை!!

காரடையான் நோம்பு என்பது பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். 

Last Updated : Mar 14, 2018, 02:18 PM IST
காரடையான் நோன்பு அடை செய்முறை!!  title=

காரடையான் நோம்பு என்பது பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். 

மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். செய்முறை இதோ:-

"தேவையான பொருட்கள்" 

வறுத்த பச்சரிசி மாவு 1 கப், காராமணி 1/4 கப், தேங்காய் கீரியது அரை கப், வெல்லம் 1 கப், ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன், தண்ணீர் 2 கப்.

காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். பின்னர் வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் கொதிக்கும்போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும். 

வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டு நன்றாக கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். 

காரடையான் நோன்பு அடை ரெடி.

காரடையான் நோன்பு பூஜை செய்யவேண்டிய நேரம்:-

> இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை.

காரடையான் நோன்பு வழிமுறை:-

> நைவேத்தியம்- காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை.
> விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜை செய்யும் இடத்தை மெழுகிக் கொள்ள வேண்டும். 
> தரையில் சிறிய கோலமிட வேண்டும்.
> கோலம் மேலே நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும்.
> வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
> இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு கயிற்றை பெண்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். 

 

Trending News