எனது உண்மையான நண்பரை இழந்துவிட்டேன்: ரஜினி!

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Feb 25, 2018, 03:24 PM IST
எனது உண்மையான நண்பரை இழந்துவிட்டேன்: ரஜினி! title=

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீதேவியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. எனது உண்மையான நண்பரை இழந்துவிட்டேன், ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகத்திற்கு பெரிய இழப்பு என்று தெரிவித்தார். மேலும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் பதிவிட்டுள்ளார்.

Trending News