Advance Tax செலுத்த நாளை வரைதான் அவகாசம்: கட்டவில்லை என்றால் அபராதம்!!

Advance Tax: அட்வான்ஸ் டேக்ஸ், தங்கள் சம்பளத்தைத் தவிர வேறு வருமான ஆதாரங்களைக் கொண்ட தனிநபர்களால் செலுத்தப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2023, 12:16 PM IST
  • அட்வான்ஸ் டேக்ஸ்: யார் செலுத்த வேண்டும்?
  • அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதில் இருந்து யாருக்கு விலக்கு கிடைக்கும்?
  • அட்வான்ஸ் டேக்ஸ்: ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Advance Tax செலுத்த நாளை வரைதான் அவகாசம்: கட்டவில்லை என்றால் அபராதம்!!   title=

வருமான வரி - அட்வான்ஸ் வரி செலுத்துதல்: வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்!! நான்காவது தவணை அட்வான்ஸ் வரியைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி மார்ச் 15 ஆகும். வரி செலுத்துவோர் அட்வான்ஸ் வரியின் இறுதித் தவணையைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்கள் பிரிவுகள் 234பி மற்றும் 243சியின் கீழ் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அட்வான்ஸ் வரியை கணக்கு மூலம் செலுத்தலாம். அட்வான்ஸ் டேக்ஸ் வரி ரசீதுகளின் உதவியுடன், செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் ஆண்டு முழுவதற்குமான வருமான ஓட்டத்தின் தகவலைப் பெறுகிறது.

நான்கு தவணைகள்
 
வருமானம் ஈட்டப்பட்ட அதே நிதியாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் நான்கு தவணைகளில் செலுத்தப்படுகிறது. மொத்த வரியில் முதல் தவணையான 15 சதவீதத்தை ஜூன் 15க்குள் செலுத்த வேண்டும். 45 சதவீதத்தை செப்டம்பர் 14க்குள் செலுத்த வேண்டும். டிசம்பர் 15க்குள் ஜூன் மற்றும் செப்டம்பர் தவணைகளை உள்ளடக்கிய வரி பொறுப்பு 75 சதவீதமாக இருக்கும். கடைசி மற்றும் முழு தவணை மார்ச் 15 க்குள் செலுத்த வேண்டும்.

அட்வான்ஸ் டேக்ஸ்: யார் செலுத்த வேண்டும்?

அட்வான்ஸ் டேக்ஸ், தங்கள் சம்பளத்தைத் தவிர வேறு வருமான ஆதாரங்களைக் கொண்ட தனிநபர்களால் செலுத்தப்படுகிறது. வாடகை, மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்புத்தொகை, லாட்டரி வெற்றி போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட வருமானம் இதில் அடங்கும். ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோர் அட்வான்ஸ் டேக்சை செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இந்த திட்டத்தில் முதலீடு செய்றீங்களா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட், 65 லட்சம் கிடைக்கும்

வருமான வரி: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதில் இருந்து யாருக்கு விலக்கு கிடைக்கும்? 

மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். TDS நெட்டின் கீழ் வரும் வரி செலுத்துவோரும் அட்வான்ஸ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
 
அட்வான்ஸ் டேக்ஸ்: ஆன்லைனில் செலுத்துவது எப்படி

ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ இணையதளமான - incometaxindia.gov.in -க்கு செல்லவும்.

ஸ்டெப் 2: "சரிவீசஸ்" என்பதைக் கிளிக் செய்யவும். பின் - ஈ பேமண்ட்: பே டேக்சஸ் ஆன்லைன் என்பதை டேப் செய்யவும். 

ஸ்டெப் 3: உங்கள் வருமான வரியைச் செலுத்த சரியான சலானைத் தேர்ந்தெடுக்கவும் (அட்வான்ஸ் டேக்ஸ்)

ஸ்டெப் 4: படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.

ஸ்டெப் 5: இப்போது, நீங்கள் வங்கியின் நெட் பேங்கிங் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். செலுத்த வேண்டிய வருமானத்தை இந்தப் பக்கத்தில் மீண்டும் சரிபார்க்க வேண்டும்.

ஸ்டெப் 6: உங்கள் சலான் எண் உட்பட உங்கள் கட்டண விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

ஸ்டெப் 7: நீங்கள் பணம் செலுத்திய பிறகு, அதன் விவரத்தை தெரியப்படுத்துவது மிக முக்கியமாகும். 

வருமான வரித்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அட்வான்ஸ் வரி செலுத்துமாறு வரி செலுத்துவோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சரியான நேரத்தில் வரியை டெபாசிட் செய்யவில்லை என்றால் வட்டி மற்றும் அபராதம் விதிக்கும் விதிமுறைகள் உள்ளன. வருமான வரித்துறையிலிருந்து வரி செலுத்துவோருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு வருவதாக வரித்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

மேலும் படிக்க | பணக்காரர்களை குறிவைத்து கிரெடிட் கார்டில் புதிய மோசடி - உஷார் மக்களே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News