வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரியாகும். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும் தொகையை வருமான வரியாக கட்டி, சோர்ந்து விட்டீர்களா... கவலை வேண்டாம், இந்தியாவில் முதலீடு செய்யாமல் உங்கள் வரியைக் குறைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் வரியைச் சேமிக்க உதவும் சில வழிகளை அறிந்து கொள்ளலாம்.
HRA தொகை மீதான வரி விலக்கு
நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராக இருந்து, வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால், வருமான வரி சட்டத்தின் 10(13A) பிரிவின் கீழ் நீங்கள் வீட்டு வாடகை கொடுப்பனவான HRA தொகைக்கு வரி விலக்கு கோரலாம். நீங்கள் கோரக்கூடிய தொகை உங்கள் சம்பளம் மற்றும் நீங்கள் செலுத்தும் வாடகையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்த நன்மையைப் பயன்படுத்தி, நீங்கள் கணிசமான அளவு வரியைச் சேமிக்க முடியும்.
LTA தொகையில் வரி விலக்கு
உங்களின் சம்பளத் தொகையின் ஒரு பகுதியாக உங்கள் முதலாளி உங்களுக்கு லீவ் டிராவல் அலவன்ஸை (LTA) வழங்கலாம். இந்தியாவிற்குள் பயணம் செய்ய இதைப் பயன்படுத்தினால், இந்தத் தொகைக்கு வரி விலக்கு பெறலாம். இந்த விலக்கு நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கிடைக்கும். எனவே, உங்கள் பயணத்தை சரியாக திட்டமிட்டால், உங்கள் LTA மீது வரியைச் சேமிக்கலாம்.
தொண்டுக்கு நன்கொடை
தொண்டுக்கு நன்கொடை அளிப்பது ஒரு நல்ல செயல் மட்டுமல்ல, அது உங்கள் வரிகளைச் சேமிக்கவும் உதவும். வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ், குறிப்பிட்ட நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வரி விலக்குக்கு தகுதியுடையவை. தகுதியான தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம், உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைத்து, உங்கள் வரிகளைச் சேமிக்கலாம்.
மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?
மருத்துவ செலவுகளை கிளைம் செய்யுங்கள்
வருமான வரியின் 80D பிரிவின் கீழ், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்குப் பிடித்தம் செய்யலாம். நீங்கள் கோரக்கூடிய விலக்கு அளவு உங்கள் வயது மற்றும் நீங்கள் வைத்திருக்கும் சுகாதார காப்பீட்டு பாலிசியின் வகையைப் பொறுத்தது. உங்கள் மருத்துவச் செலவுகளின் பதிவை வைத்திருப்பதன் மூலம், நீங்கள் விலக்குகளைப் பெறலாம். உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்கலாம்.
கல்வி கடன் வட்டிக்கான விலக்கு
உங்களுக்கோ, உங்கள் மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ கல்விக் கடன் வாங்கியிருந்தால், கடனுக்கான வட்டிக்கு நீங்கள் விலக்கு கோரலாம். வருமான வரிச் சட்டத்தின் 80இ பிரிவின் கீழ் இந்த விலக்கு கிடைக்கிறது மற்றும் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய நாளிலிருந்து அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை உரிமை கோரலாம். இந்த விலக்கு பெறுவதன் மூலம், நீங்கள் வரியைச் சேமிக்கலாம் . இதன் மூலம் உங்கள் குடும்பத்தில் கல்வியை மேம்படுத்தலாம்.
முதலீடு செய்யாமல் உங்கள் வரியைச் சேமிக்கும் சில வழிகள் தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விலக்குகளைப் பெறுவதன் மூலம், உங்கள் வரிப் பொறுப்பைக் குறைத்து, அதிக பணத்தைச் சேமிக்கலாம். வரிகளை தாக்கல் செய்யும் போது எப்பொழுதும் முறையான பதிவேடுகளை பராமரித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.
மேலும் படிக்க | Old vs New Tax Regime: எதை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ