வயது வித்தியாசத்தால் கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள்

பெரிய வயது வித்தியாசம் உள்ள தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சில பிரச்சனைகள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும்   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 6, 2022, 01:43 PM IST
வயது வித்தியாசத்தால் கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள்  title=

திருமணத்திற்கு வயது தேவையில்லை என கூறப்படுவதுண்டு. ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் அன்பும் இருந்தால், வயது எல்லாம் பெரிய பொருட்டல்ல என கூறுவார்கள். ஆனால், இவை அனைத்தும் சொல்வதற்கு அல்லது கேட்பதற்கு எளிதாக தோன்றினாலும், ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வயது வித்தியாசம் திருமணத்திற்கு முக்கியமானது. வயது வித்தியாசமும் திருமண உறவில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

சமூகத்தில் விமர்சனம்

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை என பெரிய வயது வித்தியாசம் இருக்கும் தம்பதிகள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சமூகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த விமர்சனங்கள் ரீதியாக ஒருவேளை இருவரும் ஆலோசனை செய்தால், குடும்பத்தில் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. 

மேலும் படிக்க | கருத்தரிப்பு பிரச்சனைக்கு கணவர் காரணமா? மீள்வதற்கான டிப்ஸ்

குறைகளை சுட்டிக்காட்டுதல்

வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் சமூகத்தில் எழும் விமர்சனங்களை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விமர்சனங்கள் எப்போதாவது வீட்டில் விவாதிக்க வேண்டிய சூழல் வரலாம். அந்த நேரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். யாரோ ஒருவர் அவமானப்படுத்துகிறார் என்பதற்காக வீட்டில் அதனை விவாதித்து ஒருவரையொருவர் குறைக் கூறிக் கொள்ளக் கூடாது. அப்படி கூறும் சூழல் எழுந்தால் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்துவிடும்.

தம்பதிகளின் மன நிலை

வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த தம்பதிகள் இருவருக்கும் வயது வித்தியாசம் பொருட்டாக இருக்காத நிலையில் மற்ற விஷயங்கள் பிரச்சனைகளாக எழ வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இருவரும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசம் அதை இன்னும் தீவிரமாக்க வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலைகளை பெருந்தன்மையாக கடப்பது இருவருக்கும் நல்லது.

குழந்தை பேறு சிக்கல்

பெரிய வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்ளலாம். தம்பதிகளில் ஒருவர் குழந்தையை விரும்பலாம், ஆனால் மற்றவர் விரும்பவில்லை என்றால் அது பிரச்சனையாகும். வயது வித்தியாசம் கருவுறுதலை பாதிக்கும். இதனையும் வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

பாலியல் வாழ்க்கை சிக்கல்

வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகளுக்கு இடையே எழும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக பாலியல் வாழ்க்கை பார்க்கப்படுகிறது. உறவுச் சிக்கல் இதில் கட்டாயம் ஏற்படும். இளம் வயதுடையவர் தங்களின் பாலியல் தேவையை விரும்பும்போது இருவருக்கும் இடையே உறவுச்ச்சிக்கல் எழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

மேலும் படிக்க | திருமணத்துக்கு முன் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News