மகளிர் தினம்: விலை உயர்ந்த பரிசுகளை ஓரம் தள்ளுங்க - ஆண்களே இந்த 4 விஷயங்களை செய்யுங்க

International Women's Day: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்கள், விலை உயர்ந்த பொருள்களை பரிசாக (Gifts For Women) அளிப்பதற்கு பதில் இந்த 4 விஷயங்களை செய்வதும் அவர்களுக்கு மனநிறைவை தரும்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 7, 2024, 07:43 PM IST
  • உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
  • ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • தற்போதைய சூழலில், மகளிர் தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
மகளிர் தினம்: விலை உயர்ந்த பரிசுகளை ஓரம் தள்ளுங்க - ஆண்களே இந்த 4 விஷயங்களை செய்யுங்க title=

International Women's Day: உலக மகளிர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்மைய உலகில் பெண்களுக்கான விடுதலை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கான நீதி உள்ளிட்டவை இந்த நவீன காலகட்டத்திலும் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி உள்ளது. குடும்ப வன்முறை தொடங்கி பாலியல் வன்முறை வரை பெண்களுக்கு எதிராக உலகம் முழுவதும் ஒரு நாளில் மட்டும் பல குற்றங்கள் நடக்கின்றன. 

இந்த சூழலில், மகளிர் தினம் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் தினத்தை கொண்டாட வேண்டிய அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. மகளிர் தினத்திற்கு தனது தாய், மனைவி, சகோதரிகள், தோழிகளுக்கு வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைப்பது மட்டுமின்றி, மகளிரின் வாழ்வில் எவ்வித இடையூறும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதே உறுதியாகும். குறிப்பாக, மனைவிகளுக்கு நகை வாங்கிக்கொடுப்பது, அவர்களை கேட்காமலேயே பகட்டை வெளிக்காட்டும் பரிசுகளை கொடுப்பது ஆகியவை பெண்கள் சார்ந்து தவறான புரிதலுடன் இருக்கிறோம் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மகளிர் தினத்தில் ஆண்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பெண்களை சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கச் செய்வதுதான். மகளிர் தினத்தில் மனைவியை கலாய்க்கும் ஜோக்குகளை பகிர்வது, ஆண்கள் ரொம்ப பாவம் ரீதியான வாட்ஸ்அப் ஃபார்வடுகள், ஆண்கள் தினத்தில் வாழ்த்து சொல்ல யாரும் இல்லை ஆகியவற்றை புறந்தள்ள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.  

அந்த வகையில், மகளிர் தினத்தில் பெண்களுக்கு விலை உயர்ந்த பொருள்களை பரிசாக (Gifts For Women) அளிப்பதற்கு பதில் இந்த 4 விஷயங்களை செய்வதும் அவர்களுக்கு மனநிறைவை தரும். அதுகுறித்து இதில் காணலாம்.

மேலும் படிக்க | Women's Day 2024: பெண்கள் எடை வேகமா குறைய செய்ய வேண்டிய விஷயங்கள்

பூங்கொத்து...

பூங்கொத்து கொடுப்பது எப்போதும் கிளாஸிக்கான ஒன்று. மனைவிக்கோ அல்லது காதலிக்கோ நீங்கள் நிச்சயம் ரொமான்டிக்கான மலர்கள் அடங்கிய பூங்கொத்தை வழங்கலாம். அதே நேரத்தில் உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பெண்களை நாளை நீங்கள் சந்திக்கும்போது நறுமணம் தரும் பூங்கொத்துடன் செல்வது அவர்கள் நாளைய தினம் முழுவதும் மனநிறைவுடன் இருப்பார்கள்.

புத்தககங்களை பரிசளியுங்கள்

நீங்கள் பரிசளிக்கப்போகும் மகளிருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் அவர்களுக்கு பிடித்தவை குறித்த புத்தகங்களை நீங்கள் அவர்களுக்கு பரிசாக அளிக்கலாம். 

வெளியே அழைத்துச் செல்லுங்கள்...

உங்கள் மனைவி, காதலி என்றில்லை நீங்கள் முக்கியமானவராக நினைக்கும் பெண்களை நாளைய தினம் எங்கையாவது அழைத்துச் செல்லுங்கள், குறைந்தபட்சம் அருகில் இருக்கும்  இடங்களுக்காவது. அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதும், அவர்களின் விருப்பப்படி நடப்பதும் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். 

சமைத்துக்கொடுங்கள்...

மனைவிக்காக, தாய்காக சமைத்து கொடுப்பது இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், நாளைய தினம் நீங்கள் சமைத்த உணவுகளை பெண்களுக்கு வழங்கும்போது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் முயற்சியும் நிச்சயம் அவர்களை ஸ்பெஷலாக நினைக்கவைக்கும். 

மேலும் படிக்க | Women's Day 2024 : மகளிர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதனால் யாருக்கு என்ன பயன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News