வங்கிக்கு பணம் டெபாசிட் செய்ய திடீர் என தோன்றிய ஸ்பைடர்மேன்.....

வேலையில் தன் கடைசி நாளில் ஸ்பைடர்மேனாக வந்த வங்கி ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 

Updated: Jan 30, 2019, 06:00 PM IST
வங்கிக்கு பணம் டெபாசிட் செய்ய திடீர் என தோன்றிய ஸ்பைடர்மேன்.....
Pic Courtesy : YouTube

வேலையில் தன் கடைசி நாளில் ஸ்பைடர்மேனாக வந்த வங்கி ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 

உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களுக்கு என்ற தனித்திறமை இருக்கும். சிலர் அந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர், இன்னும் சிலர் அது வெளிப்படுத்துவதில்லை. ஆனால், நாம் அனைவரின் மனதிலும் ஆங்கில திரைப்படங்களில் வருகின்ற அட்டகாசமான திறைமைகளை உடைய நிறைய கதா நாயகர்கள் மனதில் வைத்திருப்போம். குறிப்பாக, ஹல்க், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் ஆகிய கதா பத்திரங்கள் அனைத்தும் நீங்கா இடத்தை பெற்றிருக்கும். 

நாம் அனைவரும் இது போன்ற ஒரு சக்தி நமக்கும் கிடைக்காதா என ஏங்கியதும் உண்டு.  இந்நிலையில், பிரேசிலில் இருக்கும் ஒரு வங்கியில் தான் இது நடந்துள்ளது. வேலையில் தன் கடைசி நாளில் ஸ்பைடர்மேனாக வந்து அசத்தினார் அந்த ஊழியர்.

பிரேசிலின் சாவோ பவ்லோ வங்கியில் அந்த ஊழியர் ஸ்பைடர்மேன் உடையில் வேலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஊழியரின் பெயர் இதுவரை தெரியவில்லை. அந்த வீடியோவை வால்டர் கோஸ்டா என்பவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை அந்த வீடியோவை 98000 பேர் பார்த்துள்ளனர்.