நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு இன்று ஆரம்பமாகும் நவராத்திரி அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியை முன்னிட்டு இன்று கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.
நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும்.
நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜையுடன் முடியும். ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஐயதசமி. நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
இந்நிலையில் நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். பல படிகளை கொண்ட மேடையில், பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும்.
கோவையில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது. இதில் கலையம்சம் மிக்க விநாயகர், மூகாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை பஞ்சமுக ஆஞ்சநேயர், ராமாயணம், தசவதாரம், மகாபாரதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு கொலுசெட் இடம்பெற்றுள்ளது.
Coimbatore: 'Bommai Golu' dolls being prepared ahead of Navaratri; the clay idols are based on traditional themes including Mahabharata, Ramayana. Artisans have also made idols of former TN CM Jayalalithaa & former President APJ Abdul Kalam. #TamilNadu pic.twitter.com/RgU69Fya5J
— ANI (@ANI) October 7, 2018