LPG Price Hike: வரலாறு காணாத விலையேற்றம் - சாமானியர்கள் மிகவும் பாதிப்பு

LPG Price Hike in India: எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 3 மாதங்களில் ரூ .225 அதிகரித்துள்ளது. நாட்டில் சுமார் 30 கோடி எல்பிஜி இணைப்புகள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 1, 2021, 11:23 AM IST
  • பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு விலை ரூ .100 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளன.
  • எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 3 மாதங்களில் ரூ .225 அதிகரித்துள்ளது.
LPG Price Hike: வரலாறு காணாத விலையேற்றம் - சாமானியர்கள் மிகவும் பாதிப்பு title=

LPG Cylinder Price Details: சமையல் எரிவாயுவின் விலை கடந்த சில மாதங்களாக சாமானியர்களை மிகவும் பாதித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் (Oil Companies)  திங்களன்று (மார்ச் 1 2021) மீண்டும் எல்பிஜி சிலிண்டர் விலையை மேலும் 25 ரூபாய் உயர்த்தின. சமீபத்திய விலை உயர்வால், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ .819 ஆகும். அதேபோல சென்னையில் (LPG cylinder price in Chennai) தற்போதைய விலை ரூ. 835ஆக உள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு (Cooking Gas Price) விலை ஒரு சிலிண்டருக்கு ரூ .100 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை அதிகரிப்பு, கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளன. மூன்று நாட்களுக்கு முன்பு சமையல் எரிவாயுவின் விலை ரூ .25 அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ |  800 ரூபாய் LPG சிலிண்டரை வெறும் 94 ரூபாய்க்கு முன்பதிவு செய்யுங்கள்.!

பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை விலை உயர்த்தபட்டன. முன்னதாக பிப்ரவரி 4 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய தேதிகளில் முறையே ரூ .25 மற்றும் ரூ .50 உயர்த்தப்பட்டது. டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை சமையல் எரிவாயு விலை ஒரு சிலிண்டருக்கு ரூ .200 க்கும் அதிகமாக  உயர்த்தப்பட்டுள்ளது.

எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder) விலையை அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. சர்வதேச எரிபொருள் விலை விகிதங்களில் மாற்றம் வரும் விலை  உயர்த்தப்படுகின்றன. நாட்டில் சுமார் 30 கோடி எல்பிஜி இணைப்புகள் உள்ளன.

ALSO READ |  இன்றே LPG சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள்.. சிறப்பு சலுகையை அறிவித்த IOCL!

எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 3 மாதங்களில் ரூ .225 அதிகரித்துள்ளது!

1 டிசம்பர் 2020: 594 முதல் 644
1 ஜனவரி 2021: 644 முதல் 694 வரை
4 பிப்ரவரி: 694 முதல் 719 வரை
பிப்ரவரி 15: 719 முதல் 769 வரை
பிப்ரவரி 25: 769 முதல் 794 வரை
1 மார்ச்: 794 முதல் 819

ALSO READ |  Ujjwala Yojana இல் LPG Connection பெறுபவர்களுக்கு சூப்பர் ஆப்பர் அறிவிப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News