மத்தியில் ரயில்வே பயணிகளுக்கு அறிவுரை.. சொந்த போர்வைகளை கொண்டு வாருங்கள்!!

வீட்டில் இருந்து உங்கள் சொந்த போர்வைகளை கொண்டு வாருங்கள் என மத்தியில் ரயில்வே பயணிகளுக்கு வேண்டிகோள் விடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2020, 05:27 PM IST
மத்தியில் ரயில்வே பயணிகளுக்கு அறிவுரை.. சொந்த போர்வைகளை கொண்டு வாருங்கள்!! title=

மும்பை / புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Coronavirus) அச்சத்தை அடுத்து, மத்திய மற்றும் மேற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த சனிக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஏசி வகுப்புகளில் இருந்து போர்வைகள் மற்றும் திரைச்சீலைகள் திரும்பப் பெற உத்தரவிட்டன. இதற்கு முக்கிய காரணம் அவைகளை தினமும் கழுவப்பட முடியாது என்பதால் தான். மேலும் வகுப்பில் உள்ள மற்ற பொருட்களான துண்டுகள் மற்றும் தலையண உட்பட ஒவ்வொரு பொருட்களும் தினமும் கழுவப்படுகின்றன. இதனால் இதை திரும்ப பெறவில்லை. இது பயணிகளுக்கு வழக்கம் போல விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுக்க, போர்வைகள் மற்றும் திரைச்சீலைகள் உத்தரவு வரும் வரை சேவையிலிருந்து விலக்கப்பட்டு உள்ளது.

இதனால் "பயணிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக தங்கள் போர்வைகளை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். எந்தவொரு கூடுதல் தேவைகளுக்கும் சில கூடுதல் பெட்ஷீட்கள் வைக்கப்படும்" என்று மேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கஜனன் மகாத்புர்கர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

நாட்டில் வேகமாக கொரோனா தொற்று வைரஸ் பரவுவதை தொடர்ந்து, மத்திய இரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே நிர்வாகம் ஏசி பெட்டிகளில் போர்வைகளை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன. அதுமட்டுமில்லாமல் அனைத்து பெட்டிகளையும் தினமும் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Trending News