Bedroom Tips: திருமண வாழ்க்கையில் அன்பு மற்றும் காதல் கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கைத் துணையுடன் சில இனிமையான தருணங்களை செலவிட விரும்புகிறார். ஆனால் வேலைக்காரணமாக பிஸியாக இருப்பதால், கணவன் மனைவி சேர்ந்து அன்பான தருணங்களை செலவிட போதுமான நேரம் இருப்பதில்லை. நீங்கள் நாள் முழுவதும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இரவில் உங்கள் லைப் பாட்னருக்கு சிறிது நேரம் ஒதுக்குவது முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், நாள் முழுவதும் வேலை செய்தபின், வீட்டுக்கு வந்தவுடன் தனது மனைவியுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
தொலைபேசியை தூர வையுங்கள்: பலர் இரவு நேரங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கின்றனர். தம்பதிகள் தொலைபேசியில் மிகவும் பிஸியாக இருப்பதால் ஒருவருக்கொருவரை மறந்து விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் தொலைபேசியை சைலேண்ட் ஆக வைப்பது முக்கியம்.
ஒன்றாக செல்லுங்கள்: உங்கள் வேலைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடித்துவிட நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்லுங்கள். இதனால் நீங்கள் நிறைய நேரம் பெற முடியும். இதன்மூலம் உங்கள் உறவில் நெருக்கம் மற்றும் அன்பை பராமரிக்க உதவும்.
ALSO READ | உண்மையில் உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்குமா? - நிபுணர் கூறுவது என்ன?
நேரம் கொடுக்க வேண்டும்: வேலை, குழந்தைகள் மற்றும் மனைவிக்கு நீங்கள் நேரம் கொடுப்பது முக்கியம். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு நீங்கள் குழந்தைகளுக்கு நேரம் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் படுக்கையறையில் நீங்கள் உங்கள் துணைவியாருடன் தனியாக இருப்பது அவசியம். இதனால் நீங்கள் ஒருவருக்கொருவர் அதிகமான நேரத்தை செலவிட முடியும்.
ALSO READ | ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR